- பா. காயத்ரி
உருவாக்கப்பட்ட உலகத்தில்,
படைக்கப்பட்ட பாத்திரமாய்,
வண்ணங்களால் பேசப்பட்டு
மெய்யின்றி அசைவூட்டம் கண்டு
கண்டுகருத்துக் கதைகளையோ..
கேலிக் கதைகளையோ..
தேவதைக் கதைகளையோ..
கண்முன் தோற்றுவித்து,
நிழற்சித்திரத்தின் நீண்ட நிஜமாய்க்
காட்சிப்பிழம்புகள் கொண்டு
சிந்தனையைத் தீண்டுகிறது
இந்த சித்திரங்கள்.!!
No comments:
Post a Comment